Tuesday, December 9, 2014

வெலிகம முஸ்லிம் ஆரம்ப பாடசாலை தனது இரண்டாவது பரிசளிப்பு விழாவை வெகு குதுகலமாகக் கொண்டாடியது. (படங்கள் இணைப்பு)

2014-12-08ம் திகதி பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மண்டபம் காலை 07.30 மணியளவில் மாணவர்கள், ஆசிரியர்கள் பிரமுகர்கள் மற்றும் பெற்றார்கள் நிரம்பி வழியளயிற்று. 
சரியாக காலை 08.30 மணியளவில் பிரதம அதிதி கௌரவ மகிந்தயாபா அபேவர்தன (விவசாய அமைச்சர்) கௌரவ அதிதி அல் ஹாஜ் எச். எச். முஹம்மத் (நகர பிதா), விசேட அதிதிகளான
திருமதிகள் ஏ. எம். ஏப். மதனியா (பிரதிக் கல்விப் பணிப்பாளர்) கே. மீகஹவத்தகே (கோட்டக் கல்வியதிகாரி) அல் ஹஜ் எம் ஏ. எம். ஸக்வான் (உரிமையாளர்- மைக்ரோ இலக்ரோனிக்) ஆகியோர்உள்ளிட்ட பிரமுகர்கள் பாண்ட் வத்திய அணிவகுப்புடன் விழா மேடையை நோக்கி அழைத்து வரப்பட்டனர்.

மாணவர்கள் ஓதிய அருள் மறை வசனங்கள் மும்மொழி அர்த்தம் தொனிக்க வான் அலைகளில் தவழ்ந்து வந்து செவிப்பாறைகளைத் தழுவ நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. வழமை போலவே மாணவர்களினால் தேசியஇ பாடசாலைஇ வரவேற்ப்பு கீதங்கள் இசைக்கப்பட்டன.

தொடர்ந்து தலைமை மற்றும் வரவேற்ப்பு உரைகளை அதிபர் எம். ஏ. எஸ். ஸனுhலா நிகழ்த்தினார். பின்னர் பிரதம அதிதி அமைச்சர் மகிந்த யாபா அபேவர்தன உரையாற்றினார்.
அவர் தனது உரையில்…

“கடந்த 30 வருட கால புலிப் பயங்கரவாதம் சாதி-இன-மத பேதமின்றி முழு நாட்டையூமே நாசமாக்கியது. ஆனால் இன்று மலர்ந்துள்ள சமாதானத்தை சின்னா பின்னப் படுத்த நாட்டின் ஸ்திர தன்மையை சீர்குழைப்பதற்கு நாட்டுக்குள்ளே ஊடுருவியூள்ள சில சக்திகள் திட்டமிட்டுச் சதி செய்கின்றன. மத்திய கிழக்கல் சில நாடுகள் தொடுப்பதற்கு இயலாத தோனிகளாக இன்று அலைக்கழிகின்றன. ஆந்த நிலை இங்கும் ஏற்படாதிருக்க இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையூம் சரியாகச் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றார்.

பின்னர் திருமதிகளான ஏ. எம். ஏப். மதனியா (பிரதிக் கல்விப் பணிப்பாளர்) இ கே. மீகஹவத்தகே (கோட்டக் கல்வியதிகாரி)ஆகியோரின் விசேட அதிதிகள் உரை இடம்பெற்றது.

கௌரவ அதிதி அல்ஹாஜ் எச். எச். முஹம்ம் தனது உரையில் ..
“வெலிகம மக்கள் மாணவர்களின் கடந்த காலங்களைவிட வூம் இன்று நிம்மதி – திருப்தி – மகிழ்ச்சி நிரம்பி இருப்பது அவர்களின் நாளாந்த செயற்பாடுகள் முலம் உனர முடிகிறது. இந் நிலை மேலும் நீடிக்க வேண்டுமாயின் எமது கரங்கள் மென் மேலும் பலப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை நன்கு நீங்கள் அறிவீரகள். இந்த மண்ணில் எமது பாதத்தை மிகவூம் வலிமையாக ஊன்ற வைப்பதற்கு நீங்கள் வழங்கி வரும் ஓது;துழைப்புக்காக நான் நன்றி கூறுகின்றேன். தலை இருந்தால் மட்டுமே உடலின் ஏனைய பாகங்களும் இயங்க முடியூம் என்பதை நீங்கள் அறிந்து வைத்திருப்பவர்கள் என்ற வகையில் வெலிகம மக்களின் சுபீட்சம் இ சுதந்திரம் இ சுயாதிபத்தியம் கருதி எனக்கும் எனது பிரதேச மற்றும் தேசிய அரசியல் தலைமைத்துவத்துக்கும் உங்கள் ஆதரவூ உன்டு என்பதை நான் நன்கு அறிவேன். என்றார். 

வண்ண வண்ண மொட்டுக்கலாம் இந்த இளம் சிட்டுக்கள் மேடை எனும் தோப்பின் மீது இடைக்கிடை தோன்றினர். ஜம்புலண்களுக்கும் இதமூட்டிச் சென்றனர். அவர்களின் அபிநயங்கள் எம் இரசனை நரம்புகளுக்கு உரமூட்டின.
பின்வருமாறு அந்த நிகழ்வூகள் அமைந்தருந்தன.

- அறபுப் பாடல் ( தரம் 01)
- பாடசாலை பற்றிய சிங்களப் பேச்சு
- ரோஜாக்களே.. பாடல் ( தரம் 02)
- சிங்களப் பாடல் ( தரம் 03இ 04இ 05) 
- கோலாட்டப் பாடல் ( தரம் 05)
- ஆங்கிலப்பாடல் (தரம் 03இ 04இ 05)
- அறபுப் பாடல் (தரம் 03)
- கஸிதாப் பாடல் குழு ( தேசிய மீலாத் 1ம் இடம்)

அதே போன்று இடைக்கிடையே வருகை தந்திருந்த அதிதிகள் முலமாக பின்வருவோருக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

- தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை – 2014 சித்தியடைந்தோர்
- ஆண்டிருதிப் பரீட்சையில் 1ம்இ 2ம்இ 3ம் இடங்களைப் பெற்று வெற்றியீட்டியோர்.
- தமிழ் மொழித் தினஇ மீலாத் தின, ஆங்கிலத்தி தின விழா , சித்திர, கோட்ட, வலய, மாகாண, தேசிய போட்டிகளில் வெற்றியீட்டயோர்.
- தேர்ச்சி மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டியோர். (மாவட்ட, மாகாண ரீதியில்)
- மாணவர் வரவூகளில் வெற்றியீட்டியோர்.
- 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை – 2014 (152-70வரையில் புள்ளிகள் ஈட்டியோர்)
- மாணவத் தலைவர்கள்இ ஆசிரியர்கள்இ குறைவான விடுமுறை பெற்ற ஆசிரியர் மற்றும் அதிபருக்குமான விசேட பரிசுகள்.

விசேட நிகழ்வாக இப் பாடசாலையின் முன்னாள் அதிபர்களான அல்ஹாஜ் ஏ. எம். எம். ஊவைஸ் , அல்ஹாஜ் ஏ. ஆர். ஏம். இர்சாத் ஆகியோர் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.















































































































































No comments:

Post a Comment