Monday, November 3, 2014

நாளுக்கு நாள் பல்வேறு வெற்றிகளை வெலிகம முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை தாமாக்கிக் கொள்கின்றது - பரிசளிப்பு விழாவில் தென் மாகாண கல்வியமைச்சர் (படங்கள் இணைப்பு)

நாளுக்குநாள் பல்வேறு வெற்றிகளை வெலிகம முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை தாமாக்கிக் கொள்கின்றது அதன் வளர்ச்சியில் தற்போதைய அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை முன்னேற்றக் கழகம் என்பன கைகோர்த்து நிற்கின்றன. 8 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருக்கிறார்கள். ஒரு மாணவன் 188 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்குப் புகழ் சேர்த்துள்ளார்.

வெலிகம முஸ்லிம் ஆரம்பப் பாடசாலையில் இன்று காலை 9.00 மணிக்கு பாடசாலை முன்றலில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது, பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தென் மாகாணக் கல்வியமைச்சர் சந்திமா பீ ராசபுத்ர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் -

தமிழ் மொழி மூலப் பாடசாலைகளை எடுத்துநோக்கும்போது, தமிழ் மொழிப் பாடசாலைகள் பாரிய தேவைப்பாடுகளை உடையனவாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு முதலாம் தவணைக்கு முன்னர் பெரும்பாலும் ஆசிரிய வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படும். அந்த ஆசிரிய வளம் பெரும்பாலும் தமிழ் மொழி மூல தோட்டப் பாடசாலைகளுக்கே வழங்கப்படும்.

அதேபோல, ஆசிரிய  வெற்றிடம் பற்றி நீங்கள் பெரிதாகப் பயப்படத் தேவையில்லை. அடுத்த வருட ஆரம்பத்தில் ஆசிரிய வெற்றிடங்கள் பெரும்பாலும் பூர்த்திசெய்யப்படும். பாடசாலைக்குத் தேவையான அளவு ஆசிரியர்கள் அடுத்தவருடம் பாடசாலையில் இருப்பார்கள். அடுத்த வருடம் இந்தப் பாடசாலையில் வகுப்புக்கள் 20 ஆக உயரும். அடுத்த வருடம் வகுப்பறைகள் கூடுவதற்கேற்ப பௌதிக வளமான ஒரு கட்டடம் உங்களுக்கு நிர்மாணித்துத் தரப்படும். அதைச் சிறுவர்களின் செயற்பாடுகளுக்காக பயன்படுத்த முடியும்.

அதிபர் எம்..எஸ். ஸனூலா தலைமையில் நடைபெற்ற இப்பரிசளிப்பு விழாவில் தென்மாகாண தமிழ் மொழிப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மதனிய்யா கலீல்,  மாத்தறை வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். கே. நாணயக்கார, வெலிகம நகரபிதா ஹுஸைன் ஹாஜியார் முகம்மது ஆகியோரும் உரையாற்றினர்


நிகழ்ச்சிகள் யாவும் மாணவர்களால் தொகுத்து வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இடைக்கிடையே பார்வையாளர்களின் உள்ளத்தைக் கவரும் கலை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டதுடன், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு பரிசளிப்பு விழா மலரொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.










No comments:

Post a Comment